மாணவர்கள் குஷி..!! இந்த மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!
நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல மாநிலங்களில் இருந்தும் கன்னியாகுமரி கடற்கரையில் மக்கள் குவிய தொடங்கியுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களையும் சேர்த்தே திட்டமிட்டு வருகின்றனர். அதேபோல், கன்னியாகுமரி வேளாங்கண்ணியிலும் கிறிஸ்தவர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 24) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், முக்கிய அரசு அலுவலகங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (டிசம்பர் 24) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமை (28.12.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
Read More : இடம் மாறும் புதன்..!! 2025இல் இந்த 3 ராசிக்காரர்களுக்கும் அடிக்கப்போகும் ஜாக்பாட்..!! இனி பணமழைதான்..!!