முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாணவி விவகாரம்..!! சாமி கிட்ட இதையும் வேண்டுதலா வைக்கிறேன்..!! திருச்செந்தூரில் நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி..!!

We all need to stand by the women victims. We need to give them courage.
01:37 PM Jan 06, 2025 IST | Chella
Advertisement

நடிகர் சிவகார்த்திகேயன் 'அமரன்' படம் கொடுத்த வெற்றிக்கு பிறகு சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படம் சிவகார்த்திகேயனின் 25-வது படம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 100-வது படம். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், சின்ன ஓய்வுக் கிடைத்துள்ளதால் முருகனின் அறுபடை வீட்டிற்கும் ஆன்மீகப் பயணம் செல்லவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Advertisement

அந்த வகையில், இன்று (ஜனவரி 6) திருச்செந்தூர் முருகன் கோவில் இருந்து ஆரம்பித்து திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, பழனி, சுவாமிமலை, திருத்தணி என அடுத்தடுத்துச் செல்லவுள்ளார். அந்த வகையில், இன்று திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அறுபடை வீடுகளுக்குச் சென்று தரிசனம் செய்யணும். இது என்னோட ரொம்ப நாள் ஆசை. இன்னைக்குத் திருச்செந்தூர்ல ஆரம்பிச்சு தரிசனம் பண்ணினேன்.

இனி அடுத்தடுத்த படை வீடுகளுக்குச் செல்லணும். இது கடந்த மாதமே திட்டமிட்டிருந்தேன். ஆனால், ஃபெஞ்சல் புயல் வந்ததால் தள்ளிப்போனது. 'அமரன்' வெற்றி, நன்றிகள், இன்னும் பல வேண்டுதல்கள் என இந்த ஆன்மீகப் பயணம் இருக்கும்" என்றார். இதனைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, "இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கக் கூடாது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்ம எல்லாரும் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் நிற்க வேண்டும். அவர்களுக்குத் தைரியம் கொடுக்க வேண்டும். இனி இது மாதிரியான கொடுமைகள் நடக்கக் கூடாது. சாமி கிட்டையும் இதையே வேண்டுதலாக வைக்கிறேன்" என்றார்.

Read More : கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்..!! ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த முக்கிய அறிவிப்புகள்..!!

Tags :
அண்ணா பல்கலைக்கழக மாணவிஅறுபடை கோயில்சிவகார்த்திகேயன்திருச்செந்தூர்முருகன்
Advertisement
Next Article