பலத்த எதிர்பார்ப்பு!. பூமிக்கு திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்?. விண்வெளிக்கு சென்ற SpaceX!
SpaceX: சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை மீட்டு வருவதற்காக நாசாவின் The Crew-9 mission விண்கலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் கடந்த சில மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். ஜூன் மாதம், போயிங்கின் ஸ்டார்லைனர் ஒரு விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்தது. அதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் இருவரும் அங்கேயே தங்கி விட்டனர்.
காரணமே இல்லாமல் பல நாட்களாக அவர்கள் விண்வெளியில் சிக்கித்தவிக்கும் நிலையில், அவர்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும் பணியை நாசா (NASA) மேற்கொண்டுள்ளது. செப்டம்பர் 28-ஆம் தேதி புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி படை நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.17 மணிக்கு The Crew-9 mission விண்கலம் ஏவப்பட்டுள்ளது.
SpaceX Crew டிராகன் காப்ஸ்யூல்கள் வழக்கமாக நான்கு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்கின்றன. அந்தவகையில், பூமிக்கு திரும்பி வருவதற்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி வில்மோர் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு காலி இருக்கைகளுடன் ஏவப்பட்டுள்ளன. மேலும், திட்டமிடப்பட்ட பிற பணிகளுக்கு இடையூறு இல்லாமல் நடைபெற்றால், இந்த விமானம் பிப்ரவரி பிற்பகுதியில் பூமிக்கு திரும்பு என்று கூறப்படுகிறது.
Readmore: மீண்டும் தல தரிசனம்!. அன்கேப்ட் பிளேயராக களமிறங்கும் தோனி!. ரசிகர்கள் மகிழ்ச்சி!