முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திருவண்ணாமலை மலையேறும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு..!! இது ரொம்ப முக்கியம்..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

10:37 AM Nov 22, 2023 IST | 1newsnationuser6
Advertisement

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் போது, உடல் தகுதிக்கான மருத்துவ சான்று இருந்தால் மட்டுமே மலையேற அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertisement

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிறைவாக, வரும் 26ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். தீபம் ஏற்றப்படும் மலை மீது, சாதாரண நாட்களில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீபத்திருவிழாவின் போது மட்டும் தீபம் ஏற்றப்படும் நாளில், நெய் காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்காக அதிகபட்சம் 2,500 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், இந்தாண்டும் 2,500 பேர் மலையேற அனுமதி அட்டை வழங்கப்படும் என ஆட்சியர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதனையொட்டி, வரும் 26ஆம் தேதி காலை 6 மணி முதல், கிரிவலப்பாதையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை பெற விரும்புவோர், புகைப்படம், ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணம் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்நிலையில், 2,668 அடி உயரமுள்ள முறையான பாதை எதுவும் இல்லாத மலை மீது ஏறும் பக்தர்கள் திடீரென உடல் நலன் பாதிக்கப்படுவதும், மூச்சுத்திணறலில் சிக்குவதும் ஆண்டுதோறும் நடக்கிறது. எனவே, இந்தாண்டு புதிய கட்டுப்பாட்டை ஆட்சியர் முருகேஷ் விதித்துள்ளார். அதாவது, மகா தீபத்தன்று மலையேறும் பக்தர்கள், உடல் தகுதிக்கான மருத்துவச் சான்று கொண்டு வர வேண்டும். சான்று வைத்திருக்கும் பக்தர்களுக்கு மட்டுமே அடையாள அனுமதி அட்டை வழங்கப்படும்.

அதிகபட்சம் 2,500 பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மலையேறும் பக்தர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. பக்தர்களின் பாதுகாப்புக்காக, மலைப்பகுதியில் மருத்துவ முகாம், மீட்புக் குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
கார்த்திகை தீபம்திருவண்ணாமலைமாவட்ட ஆட்சியர்
Advertisement
Next Article