முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகமே..! இன்று மாலை 6 வரை தான் டைம்...! மீறினால் 2 ஆண்டு சிறை தண்டனை...!

07:11 AM Apr 17, 2024 IST | Vignesh
Advertisement

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு , ஏப்ரல் 19, 2024 வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்க உள்ள நிலையில், அனைத்துத் தேர்தல் பிரச்சாரப் பணிகள் இன்று மாலை 6 மணிக்குள் முடிக்க வேண்டும். மேரி பிரச்சாரம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தேர்தல் தொடர்பாக எந்த ஒரு பொதுக்கூட்டம் அல்லது ஊர்வலத்தை யாரும் கூட்டவோ, நடத்தவோ அல்லது கலந்துகொள்ளவோ கூடாது. ரேடியோ, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற பிற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும், தேர்தல் விஷயங்களைப் பொது மக்களுக்கும் யாரும் காட்சிப்படுத்தக்கூடாது. தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும்.

வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட, தொகுதி வாக்காளர்களாக இல்லாத அனைத்து அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள், மாலை 6 மணிக்கு மேல் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். திருமண மற்றும் சமுதாய கூடங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் விருந்தினர் மாளிகை வளாகத்தில் வெளியாட்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்களா என்பதை கண்டறிய சோதனை செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951ன் பிரிவு 126ன் கீழ், தேர்தல் முடியும் வரை இந்த விதிமுறைகள் அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்‌.

Advertisement
Next Article