முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புயல் எச்சரிக்கை..!! மக்களே ரெடியா..? பொது சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு..!!

05:45 PM Dec 02, 2023 IST | 1newsnationuser6
Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தேவையான மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அவரச கால மருத்துவ குழுக்கள், நிவாரண மையங்களில் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் தேவையான அளவு கிருமி நாசினி, நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு சுத்தமான குடிநீர், உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவரச கால மருந்துகளைத் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார மையங்களில் 24 மணி நேரம் மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். போதிய எரிபொருள் உடன் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags :
தமிழ்நாடு அரசுநிவாரண முகாம்கள்பொது சுகாதாரத்துறைமிக்ஜாம் புயல்முன்னெச்சரிக்கை நடவடிக்கை
Advertisement
Next Article