ரமல் புயலின் கோரத்தாண்டவம்!… 3.5 லட்சம் பேர் பாதிப்பு!… இதுவரை பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு!
Remal cyclone: ரமல் புயல் காரணமாக அசாமில் பெய்துவரும் தொடர் கனமழை, வெள்ளத்தில் சிக்கி வெள்ளத்தில் சிக்கி 3.5 லட்சம் பேர் பாதிப்புஅடைந்துள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், 11 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கித் தவித்த 30,000 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, மணிப்பூரில், 'ரேமல்' புயலுக்கு பின் கனமழை பெய்து வருகிறது.
அசாமில் பெய்து வரும் கனமழையால், 11 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்துள்ளன. மழை, வெள்ளம் காரணமாக சாலைகள், ரயில் தண்டவாளங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட சச்சார் மாவட்டத்தில் மோசமான வானிலை நிலவியதால் நேற்று கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. ஆனால், தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டன.
கர்பி அங்க்லாங், தேமாஜி, ஹோஜாய், சச்சார், கரிம்கஞ்ச், திப்ருகர், நாகன், ஹைலகண்டி, கோலகாட், மேற்கு கர்பி அங்கலாங் மற்றும் திமா ஹசோ ஆகிய 11 மாவட்டங்களில் பெய்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி 3.5 லட்சம் பேர் பாதிப்புஅடைந்துள்ளனர். வீடுகளில் சிக்கித் தவித்த 30,000 பேரை மீட்புப்படையினர் மீட்டு, முகாம்களில் தங்க வைத்துள்ளனர். மே 28 முதல் வீசிய புயல், மழை, வெள்ளம் போன்றவற்றில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இடைவிடாது பெய்யும் கனமழையால் பராக் பள்ளத்தாக்கு, திமா ஹசோ பகுதிகளில் சாலை மற்றும் தண்டவாளங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுஉள்ளது. அசாமை மேகாலயாவுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், வாகனங்கள் செல்ல முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரேமல் புயல் காரணமாக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதாகவும், தொடர்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Readmore: தென் இந்தியாவில் கால்பதிக்கும் பாஜக? காங்கிரஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த கர்நாடகா!!