For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கரையை கடந்த புயல்... 9 துறைமுகத்தில் ஏற்றபட்ட எச்சரிக்கை கூண்டுகளை இறக்க உத்தரவு...!

Storm passes the coast... 9 Storm warning cages ordered to be lowered in the harbor.
06:05 AM Dec 01, 2024 IST | Vignesh
கரையை கடந்த புயல்    9 துறைமுகத்தில் ஏற்றபட்ட  எச்சரிக்கை கூண்டுகளை இறக்க உத்தரவு
Advertisement

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்ததை தொடர்ந்து 9 துறைமுகங்களில் ஏற்றபட்ட புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட அறிவுறுத்தல். சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டினை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல். மகாபலிபுரம் - புதுச்சேரி அருகே கரையை கடந்துள்ளது. இதனையடுத்து புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் 70-80 கி.மீ வேகத்தில் பலத்த சூறை காற்று வீசி வருகிறது. அத்துடன் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், நாமக்கல், சேலம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்ததை தொடர்ந்து 9 துறைமுகங்களில் ஏற்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட அறிவுறுத்தி உள்ளது

சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டினை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
Advertisement