புயல் எதிரொலி..!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..!!
'மிக்ஜாம்' புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக்கடல் பகுதியில் கடந்த 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர், இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் (டிசம்பர் 3) நேற்று புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் புயல் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று சென்னையில் இருந்து 110 கிமீ தொலைவில் நிலை கொண்டது. மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து இப்புயல் நெல்லூர்- மசூலிப்பட்டிணம் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ”2015ஆம் ஆண்டிற்கு அடுத்தபடியாக 2021ஆம் ஆண்டில் சென்னையில் அதிக மழைப்பொழிவு இருந்ததாக கூறப்பட்ட நிலையில், 2023 டிசம்பரில் அதிக மழைப்பொழிவை சென்னை சந்தித்து வருகிறது. மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்களிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்து, அதனை தொடர்ந்து மழை பாதித்துள்ள இடங்களில் அமைச்சர்கள் பார்வையிட்டு, மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார்.