சென்னையை நெருங்கும் புயல்..!! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..?
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மற்றும் புதுக்கோட்டை இடங்களில் கனமழை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடைந்து வருகிறது. வானிலை மைய கணிப்புபடி, இன்று அது புயலாக மாறவுள்ளது. இதற்கு 'FENGAL - பெங்கல்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் கரையை கடப்பது தொடர்பான முக்கியமான விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்த புயல் நிலப்பரப்பில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. கடல் பரப்பில் மேல் வெப்பநிலை அதிகம் உள்ளதால், புயல் உருவாவதற்கான அது வலிமை அடைவதற்கான சாதகமான சூழல்கள் உள்ளன.
சென்னையில் இந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 800 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரத்து வருகிறது. டெல்டா அருகே மழையை கொடுப்பது போல வந்தாலும் 30ஆம் தேதி புயல் கரையை கடக்கும். அந்த நாளும், அதற்கு முதல் இரண்டு நாட்களும் கண்டிப்பாக சென்னைக்கும் மழையை கொடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.