முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

களைகட்டிய தீபாவளிக்கு மத்தியில் கல்லா கட்டிய டாஸ்மாக் கடைகள்..!! நான்கே நாட்களில் ரூ.850 கோடி..!!

08:39 AM Nov 14, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை முதல், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, துணிக்கடைகள் மற்றும் இனிப்பு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேநேரம், டாஸ்மாக் கடைகளிலும், மதுபிரியர்கள் முண்டியடித்தனர்.

Advertisement

வழக்கமாக, டாஸ்மாக் கடைகளில் சராசரியாக ஒரு நாளைக்கு 150 கோடி ரூபாய் வரை மதுவிற்பனை நடைபெறும். அதுவே வார இறுதி விடுமுறை நாட்களில் 175 கோடி ரூபாய் வரையிலும் மதுவிற்பனை நடைபெறும். இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமையில் தீபாவளி வந்ததால், வெள்ளிக்கிழமை மாலையில் இருந்தே மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. அந்தவகையில், கடந்த 4 நாட்களில் மட்டும் தமிழக டாஸ்மாக் கடைகளில் மொத்த மது விற்பனை 850 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி ஞாயிறு வரை வழக்கமாக நடைபெறும் மதுவிற்பனையை காட்டிலும், பண்டிகை காலத்தை ஒட்டி கடந்த வாரம் கூடுதல் விற்பனை பதிவானது. பண்டிகையை முடித்துக்கொண்டு உடனடியாக வெளியூர்களுக்கு பயணிக்க முடியாது என்பதால், திங்கட்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவும் மதுவிற்பனைக்கு சாதகமாக அமைந்துள்ளது.

அதன்படி, நேற்று ஒரே நாளில் மீண்டும் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி திங்கட்கிழமை வரையில் மட்டும், டாஸ்மாக் கடைகளில் 850 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனையாகியுள்ளது.

Tags :
டாஸ்மாக் கடைகள்தமிழ்நாடு அரசுதீபாவளி பண்டிகை
Advertisement
Next Article