முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வயிற்று வலியை போக்க கோடாரியால் வெட்டிய பூசாரி... கர்நாடகாவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்....

karnataka vinotha valipadu.. kodariyal vaytrai vetiya posari.
09:25 AM Jul 15, 2024 IST | Shyamala
Advertisement

கர்நாடகாவில் வயிற்று வலிக்காக சென்ற வாலிபரின் வயிற்றை  கோடரியால் பூசாரி வெட்டிய சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் மேடகுட்டா கிராமத்தில் காசிலிங்கேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் ஜக்கப்பா கட்டா என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த கோவிலில் ஒரு வினோத வழிபாடு இருந்து வருகிறது. அது என்னவென்றால், பக்தர்கள் தங்கள் உடல் பாகங்களில் எங்கேனும் தீராத வலி ஏற்பட்டதாக அறிந்து, அது குணமாக வேண்டி இக்கோவிலுக்கு வருவது வழக்கமாக உள்ளது.

Advertisement

அவர்களுக்கு பூசாரி கட்டா, வினோத நேர்த்தி கடன் செலுத்தி வருகிறார். உடலில் வலி இருக்கு என கூறி வரும் பக்தர்களிடம்,  பக்தர்களை படுக்க வைத்து உடலில் எங்கு வலி இருக்குதோ அந்த பாகத்தில் கற்பூரம் கலக்கப்பட்ட வெந்நீரை தடவிய கோடாரியால் வெட்டுகிறார். வெட்டியவுடன் அங்கு மஞ்சள் பொடி கொட்டப்பட்டு கட்டு போடப்படுகிறது. இவ்வாறு செய்வதால் அவர்களது தீராத வலி குணமாகி விடுவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

இந்த நிலையில், வயிற்று வலி சரியாக வேண்டி வாலிபர் ஒருவர்  அங்கு செல்கிறார். அப்போது, அந்த வாலிபரை தரையில் படுக்க வைத்து, அவரது கைகளையும், கால்களையும் மற்றவர்கள் பிடித்துக் கொள்கிறார்கள். பூசாரி ஜக்கப்பா கட்டா கோடாரியால் அந்த வாலிபரின் வயிற்றில் ஓங்கி 2 முறை வெட்டுகிறார். அவர் முதல் முறை வெட்டுகையில், வயிற்றை கிழித்துக் கொண்டு கோடாரி சற்று உள்ளே செல்கிறது. ரத்தமும் பீறிட்டு வருகிறது.

அப்போது அந்த வாலிபர் வலி தாங்க முடியாமல் அலறி துடிக்கிறார். பின்பு, அந்த வாலிபரின் வயிற்றில் மஞ்சள் பொடி கொட்டப்பட்டு கட்டு போடப்படுகிறது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

read more.. 5 முறை திருமணம்.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்..!! மருத்துவர் கைது!!

Advertisement
Next Article