பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் '1000' புள்ளிகளுக்கு மேல் சரிந்து, நிஃப்டி 21,300-க்கு கீழே சரிந்தது.!
பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகம் வீழ்ச்சியை கண்டிருக்கிறது. பம்பாய் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் சென்செக்ஸ் 1,053.10 புள்ளிகள் சரிந்து 70,370.55 ஆகவும், நிஃப்டி 330.15 புள்ளிகள் சரிந்து 21,241.65 ஆகவும் இருந்தது.
பங்குச்சந்தையின் இந்த திடீர் வீழ்ச்சியால் சன் ஃபார்மா ஏர்டெல் மற்றும் பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் புள்ளிகள் சென்செக்ஸ் ஏற்றம் கண்டுள்ளன. அதே நேரம் ஹெச்டிஎஃப்சி வங்கி ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஹெச்யுஎல் ஆகியவை வீழ்ச்சியை கண்டிருக்கிறது.
நிஃப்டியில் ஏற்பட்ட சரிவால் இண்டஸ்இன்ட் வங்கி எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் அதானி போர்ட் கோல் இந்தியா ஆகியவற்றின் பங்குகள் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டிருக்கிறது. அதே நேரம் பாரதிய ஏர்டெல் சன் ஃபார்மா சிப்லா ஐசிஐசிஐ பேங்க் மற்றும் ரெட்டிஷ் லேபரட்டரிஸ் ஆகியவற்றின் பங்குகள் லாபம் அடைந்திருக்கிறது.
வர்த்தக நேரத்தின்போது துறை சார்ந்த வர்த்தகங்களில் மருத்துவத் துறை தவிர மற்ற தொழில் நிறுவனங்களின் பங்குகள் இறங்குமுகமாகவே இருந்தது. இன்றைய வர்த்தகத்தில் மருத்துவத்துறை சார்ந்த பங்குகள் லாபம் கண்டிருக்கிறது.பம்பாய் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் குறிப்பிடத்தக்க அளவு சரிவை சந்தித்துள்ளது. ஒவ்வொரு பங்குகளும் 3 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.