For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஸ்டீவ் ஸ்மித்-க்கு இப்படியொரு நோயா?… பயிற்சியில் மயக்கமடைந்ததால் அதிர்ச்சி!

07:51 AM Nov 07, 2023 IST | 1newsnationuser3
ஸ்டீவ் ஸ்மித் க்கு இப்படியொரு நோயா … பயிற்சியில் மயக்கமடைந்ததால் அதிர்ச்சி
Advertisement

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான ஸ்டீவ் ஸ்மித் வெர்டிகோ என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பயிற்சியின் போது மயக்கம் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்புடன் இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. அந்த வகையில் நேற்று முன் தினம் நடைபெற்ற லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், கோப்பையை வெல்லும் முனைப்பில் மற்ற அணி வீரர்களும் கடுமையாக போராடி வருகின்றனர். அந்தவகையில் இன்றைய லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டி முக்கியம் என்பதால் ஆப்கானிஸ்தானை வீழ்த்திவிடவேண்டும் என்ற முனைப்பில் ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகமான செய்தி வந்துள்ளது.

அதாவது, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான ஸ்டீவ் ஸ்மித் வெர்டிகோ என்னும் தலைச்சுற்றல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பயிற்சியின் போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. வெர்டிகோ என்பது, திடீரென காரணமே இல்லாமல் சிலருக்கு அவர்களை சுற்றி இருக்கும் மனிதர்கள் மற்றும் பொருட்கள் சுற்றுவது போல இருக்கும். இதற்கு வெர்டிகோ என்று பெயர்.

இதுகுறித்து ஓய்வறையில் பேசிய ஸ்மித், கடந்த சில நாட்களாக சில நேரங்களில் எனக்கு வெர்டிகோ பிரச்சனை ஏற்பட்டது. இது சிறிது அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.எல்லாம் சரியாகுமென நம்புகிறேன். ஆனால் இங்கிருப்பது சரியான இடமாக தோன்றவில்லை. நான் நன்றாக இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் சிறப்பாக இருப்பதாக உணரவில்லை. இங்கிருப்பதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறியினார்.

ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் காயம் உள்ளிட்ட காரணங்களால் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் விளையாடவில்லை. தற்போது, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிட்செல் மார்ஷ் இணைந்துள்ளார். இருப்பினும், ஸ்டீவ் ஸ்மித் இந்த ஆட்டத்தில் பங்கேற்க முடியாத பட்சத்தில் அவருக்கு பதிலாக மார்னஸ் லாபுசாக்னே பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது.

Tags :
Advertisement