For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BJP: "திருட்டு ரயில் கருணாநிதி" பாஜக வெளியிட்ட பிரச்சார பாடல்...! இணையவாசிகள் விமர்சனம்...!

06:00 AM Apr 03, 2024 IST | Vignesh
bjp   திருட்டு ரயில் கருணாநிதி  பாஜக வெளியிட்ட பிரச்சார பாடல்     இணையவாசிகள் விமர்சனம்
Advertisement

தமிழக பாஜகவின் தேர்தல் பிரச்சார வீடியோ இணையவாசிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும். ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

Advertisement

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. ஏப்ரல் 19 நடைபெறும் முதல் கட்ட வாக்குப் பதிவில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி, பஞ்சாப், குஜராத் உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். கட்சித் தலைவர்கள் பொது மேடைகளில் ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் தாக்கி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தில் தனிமனித விமர்சனங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி, அமைச்சர் உதயநிதி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என அனைவரும் போட்டோவை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்பொழுது தமிழக பாஜக சார்பில் பிரச்சார பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த பிரசார வீடியோவில், முன்னாள் முதல்வர் கருணாநிதியை திருட்டு ரயிலில் ஏறி வந்ததாக விமர்சித்து வரிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல், முதல்வர் மு.க ஸ்டாலினையும் மூன்றாம் தர பேச்சாளர்கள் பேசுவது போல தத்தி என்ற வார்த்தையுடன் விமர்சித்து பாஜக கடுமையாக தனது பிரச்சார பாடலை வெளியிட்டுள்ளது. இது போன்ற விமர்சனங்கள் எல்லாம் பார்க்கும் மக்களை முகம் சுளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சமூக வலைதள வாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement