முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மக்களே பாதுகாப்பா இருங்க..!! நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!!

A red alert has been issued for Nilgiris district for heavy rains.
04:18 PM Jul 17, 2024 IST | Chella
Advertisement

நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ”மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் (ஜூலை 19) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், கோவையின் மலைப்பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ’காலையில் வாக்கிங் போகவே பயமா இருக்கு’..!! ’அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பே இல்லை’..!! செல்லூர் ராஜூ ஒரே போடு..!!

Tags :
red alertநீலகிரி மாவட்டம்பருவமழைமிக கனமழை
Advertisement
Next Article