For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வாவ்...! பத்திரப்பதிவுத்துறையில், நவீன தொழில்நுட்ப மேம்பாடு "ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டம்" தொடக்கம்...!

05:30 AM Dec 01, 2023 IST | 1newsnationuser2
வாவ்     பத்திரப்பதிவுத்துறையில்  நவீன தொழில்நுட்ப மேம்பாடு  ஸ்டார் 3 0 மென்பொருள் திட்டம்  தொடக்கம்
Advertisement

பத்திரப்பதிவுத்துறையில், நவீன தொழில்நுட்ப மேம்பாடு "ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டம்" குறித்த தேசிய அளவிலான தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்ட கருத்தரங்கை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

Advertisement

பதிவுத்துறையில் கணினிமயமாக்கல் என்கிற "ஸ்டார்" திட்டம் 6.2.2000 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களால் முன்னோடி திட்டமாக தொடங்கி வைக்கப்பட்டது. முதன்முதலில் 23 அலுவலகங்களில் தொடங்கப்பட்ட கணினிமயமாக்கல் திட்டம் பின்னர் படிப்படியாக அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களிடம் எளிய அணுகுமுறை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு புதிய மேம்படுத்தப்பட்ட வலை அடிப்படையிலான ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் தற்போது பயன்பாட்டில் உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பதிவுத்துறையில் தனித்துவமான வசதிகளுடன், அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இணையவழி பதிவை எளிமையாக்கும் விதமாக ஸ்டார் 3.0 என்னும் புதிய மென்பொருளில் செயற்கை நுண்ணறிவை கூடுமானவரை பயன்படுத்துதல், மனித தலையீடின்றி தானாகவே சேவைகளை அளித்தல், பொதுமக்கள் அலுவலகம் வராமலேயே சேவைகளை பெறுதல், தற்போதைய இணைய தளத்தை புதுப்பித்து எளிமையாக்கல், மென்பொருளை அதிவேகமாக இயங்க வைக்கும்.

மேலும் அனைத்து நிலைகளிலும் புதிய வன்பொருள் வழங்குதல், கிளவுட் தொழில் நுட்பம், கைபேசி செயலி உள்ளிட்ட சேவைகள் தொடர்பான கருத்துக்களையும் அவர்தம் மென்பொருள் சார்ந்த தொழில்நுட்ப தீர்வுகளை எவ்வாறு ஸ்டார் 3.0 திட்டத்திற்கு வழங்கி மெருகேற்றலாம் என்பதை தெரிவிக்க கருத்தரங்கில் கலந்து கொண்ட தேசிய அளவிலான தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Tags :
Advertisement