ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் மானியம்.! மாநில அரசு செய்யவிருக்கும் தரமான சம்பவம்.!
மாதம் ₹6000 குறைவாக வருமானம் ஈட்டும் ஏழை குடும்பங்களுக்கு, சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தலா ₹2 லட்சம் நிதி உதவி வழங்க, பீகார் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தொகை மூன்று தவணைகளில் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 20 லட்சம் குடும்பங்களுக்கு முதல் தவணையான ₹50,000த்தை வழங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
இவற்றில் பிகாரில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின்படி, 94 லட்சம் குடும்பங்களின் வருமானம் மாதத்திற்கு ₹6,000த்தை விடக் குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது. 'லகு உத்யமி யோஜனா திட்டம்' என்ற திட்டத்தின் கீழ் 94 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம் நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் தலைமையில் நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஐந்தாண்டுகளுக்கு தொடரும் இந்த திட்டத்தின் மூலம், மாநில தொழில் துறை ₹2 லட்சம் நிதி உதவி தொகையை மூன்று தவணைகளாக மக்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளது.
94 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். கணினிமயமாக்கப்பட்ட ரேண்டமைசேஷன் செயல்முறை மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். முதல் தவணையாக ₹50,000, 20 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
மேலும் சிவில் தேர்வுகளுக்கு தயாராகும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தில் இருக்கும் மாணவர்களுக்கு, நிதி உதவியின் வரம்பை விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, ரூபாய் ₹30,000 முதல் ₹75,000 வரை ஒருமுறை நிதி மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.