முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

SBI வங்கியில் வேலை.. ரூ.86 ஆயிரம் வரை சம்பளம்.. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

State Bank of India (SBI) has announced that applications are invited to fill the vacancies of Specialist Cadre Officer (SCO)
03:21 PM Dec 16, 2024 IST | Mari Thangam
Advertisement

இந்திய ரிசர்வ் வங்கி (State Bank of India -SBI) சிறப்பு கேடர் அதிகாரி (Specialist Cadre Officer - SCO) காலிபணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

Advertisement

காலி பணியிடங்களின் விவரம் :

1. உதவி மேலாளர் (பொறியாளர்- சிவில்) : 42 பணியிடங்கள்,

2. உதவி மேலாளர் (பொறியாளர்- எலக்ட்ரிக்கல்) : 25 பணியிடங்கள்,

3. உதவி மேலாளர் (பொறியாளர்- தீயணைப்பு) : 101 பணியிடங்கள்,

4. உதவி மேலாளர் (பொறியாளர்- சிவில்) : 1 இடம்

விண்ணப்பிப்பதற்கான தகுதி : குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களோடு சிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கட்டிடங்கள், சோதனைப் பொருட்கள் அல்லது திட்டமிடல் மற்றும் வடிவமைப்பில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

உதவி மேலாளர் (பொறியாளர்- எலக்ட்ரிக்கல்) : குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களோடு எலக்ட்ரிக்கல் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். யுபிஎஸ், ஜெனரேட்டர்கள், லிஃப்ட் போன்ற மின் சாதனங்களை நிறுவுதல் மற்றும் பராமரித்தல் ஆகிய துறை சார்ந்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

உதவி மேலாளர் (பொறியாளர்- தீயணைப்பு) : தீயணைப்பு பொறியியல் அல்லது அதற்கு ஈடான பட்டம் பெற்றிருத்தல் அவசியம். தீ பாதுகாப்பு அல்லது தீயணைப்புப் பணிகளில் 2- 3 வருட அனுபவம் வேண்டும்.

சம்பள விவரம் : ரூ.48480 முதல் 85920 வரை 

விண்ணப்பக் கட்டணம் : பொது/ பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்/ ஓபிசி – ரூ.750 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த கட்டணமும் இல்லை.

விண்ணப்பிப்பது எப்படி? புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் எனில் https://recruitment.bank.sbi/crpd-sco-2024-25-19/apply/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்ய வேண்டும்.

Read more ; இல்லற வாழ்க்கையில் ஆர்வம் குறைய என்ன காரணம்..? ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்..!!

Tags :
Specialist Cadre OfficerSTATE BANK OF INDIA
Advertisement
Next Article