முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

SBI வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை.. ரூ.48,500 சம்பளம்..!! தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

State Bank of India has released a notification for the recruitment of Assistant Manager.
01:56 PM Jan 13, 2025 IST | Mari Thangam
Advertisement

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ப்ரோபேசனரி ஆபிஸர் (PROBATIONARY OFFICERS) அல்லது அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisement

காலியிடங்களின் எண்ணிக்கை: 600

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். கல்லூரி இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் 30.04.2025க்குள் தேர்ச்சி பெற வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.04.2024 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது வரம்பில் சலுகை உண்டு.

சம்பளம்: அடிப்படை சம்பளம் ரூ. 48,480

தேர்வு செய்யப்படும் முறை: இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உண்டு. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழி தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.

விண்ணப்பம் செய்வது எப்படி?

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 
https://sbi.co.in/web/careers/current-openings அல்லது https://ibpsonline.ibps.in/sbiponov24/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.

இப்போது உங்களுக்கு விண்ணப்ப எண் மற்றும் கடவுச் சொல் கொடுக்கப்படும். அதனைக் கொண்டு உள்நுழைந்து புகைப்படம் மற்றும் கையொப்பத்தைத் பதிவேற்றவும். பின்னர் உங்கள் தனிபட்ட விவரங்கள், கல்வி விவரங்கள் உள்ளிட்டவற்றை உள்ளிடவும். அடுத்ததாக கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, ஓ.பி.சி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. எஸ்.சி, எஸ்.டி மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.01.2025

Read more ; தமிழரின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு.. உலகை திரும்பி பார்க்க வைத்த புரட்சி..!! வரலாறு ஒரு பார்வை..

Tags :
Assistant ManagerjobSTATE BANK OF INDIA
Advertisement
Next Article