முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

போரைவிட, பசி பட்டினியால்தான் அதிக உயிர் பலி நேரிடும்!… நேதன்யாகு பகீர்!... நாளுக்குநாள் மோசமாகும் காஸாவின் நிலை!

10:14 PM Dec 27, 2023 IST | 1newsnationuser3
Advertisement

காஸாவில் வரலாறு காணாத பஞ்சம் வந்துவிடும். போரால் கொல்லப்படுவதை காட்டிலும், பசி பட்டினியால் பலரும் உயிரிழப்பார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இஸ்ரேல் - காஸா இடையிலான சண்டை 81வது நாளை எட்டியுள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இஸ்ரேல் தரப்பில் 1,139 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 8,730 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் 76 குழந்தைகள் உட்பட 303 பேர் உயிரிழந்துள்ளனர். 3,450 பேர் காயமடைந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் ரத்த வெள்ளத்தில் குழந்தைகளின் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி மனதை ரணமாக்கி வருகின்றன.

ஐ.நா சபை மற்றும் இதர நாடுகளின் முயற்சியால் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு மட்டுமே ஒப்புதல் பெற முடிந்தது. தற்போது காஸாவில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளன. வெளியில் இருந்து உணவு செல்வதற்கான பெரும்பாலான வழிகளை இஸ்ரேல் ராணுவம் அடைத்துக்கொண்டுள்ளது.

இதே நிலை நீடித்தால் வரும் 2024 பிப்ரவரியில் காஸாவில் வரலாறு காணாத பஞ்சம் வந்துவிடும். போரால் கொல்லப்படுவதை காட்டிலும், பசி, பட்டினியால் பலரும் உயிரிழப்பர் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் போரை நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கும் விஷயம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் வடக்கு காஸாவில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான புகைப்படங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

Tags :
hungry starvingNetanyahuஅதிக உயிர் பலி நேரிடும்இஸ்ரேல் - ஹமாஸ் போர்காஸாநாளுக்குநாள் மோசமாகும் காசாநேதன்யாகு பகீர்பசி பட்டினி
Advertisement
Next Article