For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தும்மல் வந்தால் கூட என்னை பதவி விலக சொன்ன ஸ்டாலின் போதைப்பொருள் விவகாரத்தில் இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன்?… EPS!

05:45 AM Mar 12, 2024 IST | 1newsnationuser3
தும்மல் வந்தால் கூட என்னை பதவி விலக சொன்ன ஸ்டாலின் போதைப்பொருள் விவகாரத்தில் இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன் … eps
Advertisement

EPS: அ.தி.மு.க., ஆட்சியில், தனக்கு தும்மல் வந்தாலும், நான் பதவி விலக வேண்டும் என்று சொன்ன, இன்றைய முதல்வர் ஸ்டாலின், போதைப்பொருள் விவகாரத்தில் இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த, 110 கோடி ரூபாய் மதிப்பிலான, 100 கிலோ, 'ஹசீஸ்' என்ற போதைப்பொருளும், 874 கிலோ கஞ்சாவும், திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த ஆட்சியில், போதைப்பொருள் புழக்கம், கட்டுக்கடங்காத நிலைக்கு சென்று விட்டது.

அ.தி.மு.க., ஆட்சியில், தனக்கு தும்மல் வந்தாலும், நான் பதவி விலக வேண்டும் என்று சொன்ன, இன்றைய முதல்வர் ஸ்டாலின், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் வைத்து, தார்மீக பொறுப்பேற்று இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன்? அ.தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்து குரல் கொடுத்து, அரசின் கவனத்திற்கு பல்வேறு விஷயங்களை கொண்டு வந்த சமூக பொறுப்பாளர்கள் பலர், தற்போது தி.மு.க., ஆட்சியில், தமிழக மக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள, போதைப்பொருள் விவகாரத்தில் மவுனமாக இருப்பது ஏன்?

தமிழகத்தில் செய்யப்படும், பல்வேறு போதைப்பொருள் பறிமுதல்கள், மத்திய அமைப்புகளால் தான் செய்யப்படுகின்றன. தமிழக காவல் துறை, கும்பகர்ண துாக்கத்தில் இருக்கும் முதல்வரை போலன்றி, துரிதமாக நடவடிக்கை எடுத்து, போதைப் பொருட்கள் அற்ற தமிழகம் என்ற நிலையை எட்டுவதற்கான, அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Readmore: விஜய் எதிர்ப்பு!… மக்களுக்கு விரோதமாக இருக்கும் சிஏஏ சட்டத்தை ஏற்க முடியாது!

Tags :
Advertisement