முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Edappadi: ஊழல் செய்வதிலும், லஞ்சம் வாங்குவதிலும், சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின்...!

06:54 PM Mar 31, 2024 IST | Vignesh
Advertisement

தமிழ்நாட்டில் பாஜகவை அடையாளம் காட்டியதே அதிமுக தான் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என பேசிய பாஜக மதுரை வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்; கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்; 1998ம் ஆண்டு பாஜகவின் தாமரை சின்னத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியதே ஜெயலலிதாதான். உங்களுடைய அடையாளத்தையே அதிமுகதான் காட்டியது என்றார்.

வீட்டு வரி, சொத்து வரி, மின்சார கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் என அனைத்து கட்டணங்களும் விடியா ஆட்சியில் உயர்ந்துவிட்டது. ஊழல் செய்வதிலும், லஞ்சம் வாங்குவதிலும், சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே. முதல்வர் ஸ்டாலினுக்கு நாட்டு மக்களை பற்றி கவலையில்லை, வீட்டு மக்களை பற்றியே கவலை; மக்களை சந்தித்தால்தான் அவர்கள் அடையும் துயரங்கள் பற்றி முதல்வருக்கு தெரியும். தமிழகத்தில் 10 ஆண்டுகள் நடைபெற்ற அதிமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சி என கூறினார்.

Advertisement
Next Article