முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஸ்டாலினுக்கு துண்டு சீட்டு இல்லாமல் பேச முடியாது..! INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்..! டிடிவி தினகரன் கேள்வி…!

09:12 AM Mar 26, 2024 IST | 1Newsnation_Admin
Advertisement

2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. கட்சிகளின் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய மும்மரம் காட்டி வருகின்றனர். பல முக்கியத் தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

பிஜாக கூட்டணியில் உள்ள அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனீ தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்றைய தினம் ஆண்டிபட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாபோது பேசிய அவர், "தேசிய ஜனநாயக (NDA) கூட்டணிக்கு தலை இருக்கிறது, அந்த தலை உலக புகழ் பெற்ற மோடி அவர்கள், ஆனால் திமுக இருக்கிற கூட்டணிக்கு யாரு பிரதமர் வேட்பாளர்..? ஸ்டாலினா.., அவர் என்றால் அடுத்த ஸ்டேட்ல கூட விடமாட்டாங்க, இது எதோ போதை மருந்தோட வரப்போறாங்க என்று. மோடி அவர்கள் ஒரு மணி நேரம் ஆனாலும் பேசக்கூடியவர், ஆனா நம்மாளு, சின்ன துண்டு சீட்டு இல்லாமல் பேசமுடியாது. திமுகவும் பழனிசாமியும் கள்ளக்கூட்டணி வைத்திருக்கிறார்கள்" என்று டிடிவி தினகரன் கூறினார்.

Also Read: ‘கல்லை காட்டும் உதயநிதி’..!! ‘பல்லை காட்டும் எடப்பாடி’..!! தேர்தல் பிரச்சாரத்தில் மாறி மாறி தாக்கு..!!

Tags :
dinakar about stalinLok Sabha Election 2024T. T. V. Dhinakaranttv dinakaran about eps
Advertisement
Next Article