For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

TN Fishermen Arrest: தொடரும் அவலம்..! மீண்டும் தமிழக மீனவர்கள் 20 பேரை கைது செய்த இலங்கை கடற்படை...!

05:30 AM Mar 21, 2024 IST | 1newsnationuser2
tn fishermen arrest   தொடரும் அவலம்    மீண்டும் தமிழக மீனவர்கள் 20 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Advertisement

இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 20 மீனவர்களை கைது செய்து 3 விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர்.

Advertisement

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்யும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த 10ம் தேதி தான் வங்கக்கடலின் இரு பகுதிகளில் 22 தமிழக மீனவர்களும், 15ம் தேதி 15 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். அதனால், அந்தப் பகுதிகளில் ஏற்பட்ட பதட்டமும், கவலையும் விலகுவதற்கு முன்பே மேலும் 21 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 58 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். கடந்த இரு மாதங்களில் 80-க்கும் கூடுதலான மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கச்சத்தீவு - நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 20 மீனவர்களை கைது செய்து 3 விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர். ஏற்கெனவே, 21 ராமேஸ்வர மீனவர்களை கைது செய்ததோடு, மேலும் 20 பேரை கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கைது நடவடிக்கைக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement