SRH vs MI: அபிஷேக் சர்மா, ஹெட் மரண அடி... கதி கலங்கிய மும்பை இந்தியன்ஸ்.!! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.!!
உலக கிரிக்கெட்டின் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது . ஐபிஎல் தொடரின் 8-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து இன்று விளையாடி வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இந்த போட்டி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் மாயங் அகர்வால் 13 ரன்களில் ஆட்டம் இழந்தாலும் அந்த அணியின் துவக்க வீரர் ட்ராவஸ் ஹெட் மற்றும் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா இருவரும் இணைந்து மும்பை அணியை சிதறடித்தனர்.
ஹைதராபாத் அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடிய டிராவஸ் ஹெட் மிகச் சிறப்பாக விளையாடி தனது அரை சதத்தை நிறைவு செய்தார். 18 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்த ஹெட் 24 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவர் 18 பந்துகளில் அரை சதம் கடந்ததன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வேகமாக அரை சதம் எடுத்த டேவிட் வார்னரின் சாதனையை முறியடித்தார்.
ட்ராவஸ் ஹெட் ஆட்டம் இழந்ததும் மறுமுனையில் அதிரடியாக ஆடிய இளம் வீரர் அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்து ட்ராவஸ் ஹெட் சாதனையை சில நிமிடங்களில் முறியடித்தார். இவர்கள் இருவரது அதிரடி ஆட்டத்தால் ஹைதராபாத் அணி முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் தத்துவங்களில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை படைத்திருக்கிறது.
இதற்கு முன்பு ஹைதராபாத் அணி மும்பை அணிக்கு எதிராக இந்த சாதனையை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் வருடம் அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பத்துபவர்களில் 131 ரன்கள் எடுத்தது. இந்த சாதனையை இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் முறியடித்து இருக்கிறது. அதிரடியாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 23 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தற்போது ஹைதராபாத் அணி 13 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் 3 விக்கெட்டுகள் இழந்துள்ளது. மார்க்ர்ம் 24 ரன்களுடனும் கிளாஸன் 11 ரன்கள்டனும் களத்தில் உள்ளனர்.