For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

SRH Vs KKR: யாருக்கு கைக்கொடுக்கப்போகிறது சேப்பாக்கம் மைதானம்?

05:30 AM May 26, 2024 IST | Baskar
srh vs kkr  யாருக்கு கைக்கொடுக்கப்போகிறது சேப்பாக்கம் மைதானம்
Advertisement

2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு நடைபெறுகிறது.

Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்கெனவே கொல்கத்தாவும், ஹைதராபாத்தும் மோதிய போட்டியில், கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியுள்ளது.இது ஒருபுறம் இருக்க இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சேப்பாக்கம் மைதானம் எந்த அணிக்கு கைக்கொடுக்க போகிறது என்பதை குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தை பொறுத்தவரை சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஒரு மைதானம் என்று கருதப்படுகிறது. 160+ என்ற இலக்கை சேஸ் செய்வது என்பதே கடினமானதாகவே இருக்கும். ஆனால், இந்த சீசனில் பேட்டிங் கொஞ்சம் எளிமையாகத்தான் காணப்படுகிறது. இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் சேப்பாக்கம் மைதானத்தில் அதிக ரன்களை குவித்துள்ளனர். இதனால், இன்றைய இறுதிப்போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் சாதகமாக அமையும்.

சேப்பாக்கம் மைதானத்தின் கடந்த கால வரலாறு:

1)சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 84 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

2)முதலில் பேட்டிங் செய்த அணி 49 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் 35 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

3)முதலில் பேட்டிங் செய்யும் ஒரு அணியின் சராசரி ஸ்கோர் 164.37 ஆக உள்ளது. ஒரு ஓவருக்கான ரன் ரேட் 8.04, சராசரியாக 26.37 ரன்களுக்கு ஒரு விக்கெட் வீழ்கிறது.

4)சேப்பாக்கம் மைதானத்தில் அதிகபட்சமாக கடந்த 2010ம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்களை சேர்த்தது.

5)குறைந்தபட்சமாக கடந்த 2019ம் ஆண்டு சென்னை அணிக்கு எதிராக, பெங்களூர் அணி 70 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகியுள்ளது.

6)கடைசியாக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 11 ஐபிஎல் போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணி 4 போட்டிகளிலும், சேஸ் செய்த அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

7) இந்த மைதானத்தில் 122 அரைசதங்களும், 7 சதங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சேப்பாக்கம் மைதானமும்… ஹைதராபாத் அணியும்…

சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 8 போட்டிகளில் தோல்வி மற்றும் ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் ஹைதராபாத் அணி அதிகபட்சமாக 177 ரன்களையும், குறைந்தபட்சமாக 134 ரன்களையும் சேர்த்துள்ளது.

சேப்பாக்கம் மைதானமும்… கொல்கத்தா அணியும்…

சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணி இதுவரை, 14 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதிகபட்சமாக மூன்று முறை சேஸ் செய்து வென்றுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 202 ரன்களையும், குறைந்தபட்சமாக 108 ரன்களையும் சேர்த்துள்ளது.

Read More: சென்னையில் ரூ.200 கோடி முதலீடு செய்யும் ஜெர்மனி நிறுவனம்..!! என்ன பிளான்?

Tags :
Advertisement