For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாலியல் புகாரில் சிக்கிய Squid Game நடிகர்..!! 79 வயதில் சிறை தண்டனை விதிப்பு..!!

05:52 PM Feb 03, 2024 IST | 1newsnationuser6
பாலியல் புகாரில் சிக்கிய squid game நடிகர்     79 வயதில் சிறை தண்டனை விதிப்பு
Advertisement

பிரபல Squid Game தொடரில் நடித்த ஓ யங் சூவுக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்காக ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

உலகம் முழுவதும் பல கோடி பேர்களால் பார்க்கப்பட்ட கொரியன் வெப் சிரீஸ் Squid Game. நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான இத்தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தென் கொரியாவைச் சேர்ந்த நடிகர் ஓ யங் சூ . 79 வயதான இவர் தென் கொரிய நடிகர்களில் முதல் முதலாக சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருதைப் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக இவர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவர் மீதான குற்றச்சாட்டு தவறு என்று அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், சம்பந்தப்பட்ட பெண் மீண்டும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் ஓ யங் சூ "எனது கடைசி காலத்தில் இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமப்பது கடினமாக இருக்கிறது " எனத் தெரிவித்திருக்கிறார்.

Tags :
Advertisement