ரஷ்யாவின் உளவாளி, மீனவர்களின் நண்பன்..!! 'ஹவால்டிமிர்’ திமிங்கலம் திடீரென உயிரிழப்பு..!! என்ன காரணம்..?
ரஷ்யா எப்போதுமே எல்லை கடந்து உளவு பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. சில நேரங்களில் உளவு பார்க்கும்போது வசமாக சிக்கிக் கொள்வதும் உண்டு. அப்படி தான் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நார்வே அருகே ரஷ்யா உளவு பார்க்க அனுப்பிய திமிங்கலம் ஒன்று சிக்கியது. 2019இல் ஆண்டு உலகெங்கும் பேசுபொருளான பெலுகா வகை திமிங்கலம் தான் ஹவால்டிமிர். 14 அடி நீளமும் 1224 கிலோ எடையும் கொண்ட இந்த திமிங்கலத்தை பலரும் ரஷ்யாவின் உளவாளி என்றே அழைக்கின்றனர்.
மீனவர்களுடன் எப்போதும் நட்பாகப் பழகும் இந்த திமிங்கலம் தற்போது உயிரிழந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த திமிங்கலம் எப்படி உயிரிழந்தது. அதற்கு என்ன ஆனது என்பது குறித்த தகவல்கள் இப்போது வரை தெளிவாக இல்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு இந்த திமிங்கலம் கடலில் மீனவர்கள் அதிகம் இருக்கும் இடத்திற்குச் சென்றுள்ளது.
திமிங்கலத்தை பார்த்து இது உளவாளியா? என நீங்கள் கேட்கலாம். ஆனால், விஷயம் என்னவென்றால் அந்த திமிங்கலத்தில் கேமரா உடன் கூடிய சில கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. அந்த கருவிகளில் ரஷ்யாவில் உள்ள St செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சிட்டி என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால் தான், அந்த திமிங்கலம் ரஷ்ய உளவாளியாக இருக்கலாம் என்று பலரும் பேச தொடங்கினர். இந்த பெலுகா திமிங்கலம் மனிதர்களுடன் மிகச் சகஜமாகவே இருந்தது. ஏதோ சிறு வயதில் இருந்தே மனிதர்கள் கூட இருந்தது பேலவே மீனவர்களுடன் நெருக்கமாக இந்தது. ரஷ்ய உளவாளி என சொல்ல இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
உலகெங்கும் இந்த பேச்சு அதிகரித்த நிலையில், நார்வே அரசு இது குறித்த எச்சரிக்கையைக் கூட வெளியிட்டிருந்தது. அதாவது, ஒஸ்லோவிற்கு அருகில் உள்ள ஃப்ஜோர்டில் காணப்படும் பெலுகா திமிங்கலத்துடன் எந்தவொரு தொடர்பையும் வைத்திருக்கக்கூடாது என்று அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Read More : அளவுக்கு மீறி தண்ணீர் குடித்தால் மரணம் கூட நிகழும்..!! ஆரோக்கியமாக இருக்க இதை பண்ணுங்க..!!