நடைமுறைக்கு வந்த ஸ்பாட் பைன் மெஷின்..!! இதுவரை ரூ.5 லட்சம் வசூல்..!! இனி யாரும் இப்படி பண்ணாதீங்க..!!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டுவது போன்ற சட்டவிரோத விதிமீறல் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக அமலில் இருந்த அபராதத் தொகை தற்போது திருத்தப்பட்டுள்ளது. அதாவது பொது, தனியார் இடங்களில் தூக்கி எறியப் படும் குப்பை, வாகனங்களில் இருந்து குப்பை கொட்டுதல் ஆகியவற்றிக்கு அபராதத் தொகை ரூ.500இல் இருந்து தற்போது ரூ.5,000 என உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது இடங்களில் விதிகளை மீறி குப்பை கொட்டுவோர் மற்றும் எரிப்போர் மீது ஸ்பாட் பைன் மெஷின் மூலம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை கண்காணிக்க அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றும் முன்னதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தான், ஸ்பாட் பைன் மெஷின் மூலம் அபராதம் விதிக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் மூலம் தற்போது வரை 289 இடங்களில் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.