முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிகாலை எழுந்தவுடன் இந்த பழக்கத்தை கடைபிடியுங்கள்..!! முன்னோர்கள் பின்பற்றிய ஆன்மீக ரகசியங்கள்..!!

Waking up early in the morning and performing kuttu and thopukkaranam in the presence of Lord Ganesha has been a tradition since the time of our ancestors.
05:00 AM Nov 27, 2024 IST | Chella
Advertisement

அதிகாலையில் எழுந்ததும் விநாயகப் பெருமான் முன்னிலையில் குட்டுப் போடுதல் மற்றும் தோப்புக்கரணம் போடுதல் போன்றவை முன்னோர்களின் காலத்தில் இருந்தே வழக்கமாக உள்ளது. முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு வழக்க முறையிலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. இது போன்று பல ஆரோக்கிய பழக்கங்களை நமது முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். அதில் ஒன்றுதான் தோப்புக்கரணம் போடும் பழக்கம்.

Advertisement

காதுகளில் உள்ள 200 நரம்புகளில் சீராக இரத்த ஓட்டம் ஏற்படுவதற்கும் புதிய ரத்தம் உருவாகி ஞாபக சக்தியை வளர்ப்பதற்கும் குட்டுப் போடுதல் மற்றும் தோப்புக்கரணம் போடுதல் பெரிதும் உதவுகிறது. சாதரணமாகக் கூட குழந்தைகளுக்கு மறதி ஏற்படாமல் இருக்க தோப்புக்கரணம் போடுவது, மோதிரக் கையினால் குட்டுப் போட வேண்டும் என்று கூறுகின்றனர். ஒவ்வொருவரும் அதிகாலையில் எழும்போது, வலதுபக்கம் திரும்பி படுக்கையில் இருந்து எழுந்திருக்க வேண்டுமாம்.

அப்படி செய்தால், அன்றைய நாளில் செய்யும் நீங்கள் செய்யப்போகும் அனைத்து காரியங்களும் வெற்றியடையுமாம். காலையில் எழுந்தவுடன் முதலில் உச்சரிக்கும் வார்த்தை நேர்மறைச் சிந்தனையோடு இருக்க வேண்டும். அது தெய்வப் பெயர்களாகக் கூட உச்சரிக்கலாம். காலையில் எழுந்து முதலில் உள்ளங்கையைப் பார்த்த பின் பூமியைத் தொட்டு வணங்கி, அதன் பின் காலைக் கடன்களைத் தொடர்ந்தால், ஒவ்வொரு நாளும் உற்சாகமாகச் செயல்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

Read More : 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! தமிழ்நாடு அரசில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Tags :
அதிகாலைஆன்மீகம்விநாயகப் பெருமான்
Advertisement
Next Article