முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

AIADMK: விறுவிறு தேர்தல் பணிகள்!… அதிமுகவில் இன்று நேர்க்காணல்!… எந்தெந்த தொகுதிக்கு எப்போது தெரியுமா?

05:45 AM Mar 10, 2024 IST | 1newsnationuser3
Advertisement

AIADMK: எதிர்வரும் மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனு பெற்றவர்களிடம் இன்றும், நாளையும் நேர்க்காணல் நடைபெறவுள்ளது.

Advertisement

மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் மார்ச் 6 ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. சுமார் 2 ஆயிரத்து 450 ககும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், விருப்ப மனு அளித்தவற்களுக்கான நேர்காணல் வரும் மார்ச் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அதிமுக தலைமை கழக செய்திக்குறிப்பில், நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்துள்ளவர்களுக்கு நேர்க்காணல் நடத்தப்பட உள்ளது. சென்னையில் உள்ள தலைமை கழக புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் 10ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 11ம் தேதி (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் நேர்க்காணல் நடைபெற உள்ளது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு, திருவள்ளூர் (தனி), வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரம்பத்தூர், காஞ்சிபுரம் ( தனி) , அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி தொகுதிகளுக்கும், பிற்பகல் 2:30 மணிக்கு மேல், திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் ( தனி), கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ( தனி ) மற்றும் கோயம்புத்தூர் தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு, பொள்ளாச்சி, கரூர், திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம்( தனி) , மயிலாடுதுறை, நாகை ( தனி), தஞ்சாவூர் தொகுதிகளுக்கும், பிற்பகல் 2:30 மணிக்கு மேல், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி ( தனி) , கன்னியாகுமரி, புதுச்சேரி உள்ளிட்ட தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேர்க்காணலில் பங்கேற்போர் விருப்ப மனு பெற்றதற்கான அசல் கட்டண ரசீதுடன் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: திடீர் ராஜினாமா செய்த இந்திய தேர்தல் ஆணையர்!… நெருங்கும் தேர்தலுக்கு மத்தியில் வெடித்த சர்ச்சை!

Tags :
Interview today in AIADMKஅதிமுகவில் இன்று நேர்க்காணல்எந்தெந்த தொகுதிக்கு எப்போது தெரியுமா?விறுவிறு தேர்தல் பணிகள்
Advertisement
Next Article