முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம்...! தமிழக அரசு அறிவிப்பு

Special Small Business Loan Scheme Camp in Cyclone-hit Villupuram, Cuddalore District
06:27 PM Dec 06, 2024 IST | Vignesh
Advertisement

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்ட சிறுவணிகர்களுக்கு ”சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்" முகாம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் நவம்பர் 30-ம் தேதி வீசிய "ஃபெஞ்சல்" புயல் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப் பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிக கனமழை காரணமாக சிறுவணிகர்கள், சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி, சிறு வணிகர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய அவசரத் தேவையை கருத்தில் கொண்டும், உள்ளூர் பொருளாதாரத்தில் அவர்களது பங்களிப்பை அறிந்தும், அவர்களின் வாழ்வா தாரத்தை மீட்டெடுக்கவும் "சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்" மூலம் முகாம் அமைத்து கடன் வழங்கப்பட உள்ளது.

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் சிறப்பு முகாம்கள்நடத்தப்பட்டு தகுதியானவர்க ளுக்கு குறைந்த வட்டியில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சிறுவணிகக்கடன் வழங் கப்படவுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த அட்டை உடைய தெருவியாபாரிகள், சிறு வணிகர்கள், வணிக உபயோகத்துக்காக மின் இணைப்பு பெற்ற சிறு கடை வியாபாரிகள், தெருவோர பூ வியாபாரிகள், காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ப வர்கள், சாலையோர உணவ கங்கள் நடத்துபவர்கள், கைவினைஞர்கள், மீனவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், அமைப் புசாரா தொழிலாளர்கள், நடை பாதையில் கடை வைத்திருப்பவர்கள் ஆகிய சிறு வணிகர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தின் மூலம் கடன் பெற தகுதியா னவர்கள் ஆவர்.

இந்த "சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்" முகாம்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் இன்று முதல் வரும் டிச.12 வரை நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் மரக்கா ணம், திருக்கோவிலூர், பெரிய செவலை, கண்டாச்சிபுரம், விக்கிரவாண்டி ஆகிய கிளைகளிலும், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் மஞ்சகுப்பம், செம்மண்டலம், கூத்தப்பாக்கம், நெல்லிகுப்பம், பண் ருட்டி ஆகிய கிளைகளிலும் நடைபெறவுள்ளது. இந்த ”சிறப்பு சிறு வணிகக்கடன் திட்டம்” முகாம்களில் சிறுவணிகர்கள் உரிய ஆவணங்கள் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

Tags :
Chennaicuddaloretn governmentசென்னைதமிழ்நாடுதமிழ்நாடு அரசு
Advertisement
Next Article