அரசு அதிரடி...! PF செலுத்தாத நிறுவனங்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்க உத்தரவு...!
வருங்கால வைப்பு நிதி செலுத்தத்தவறிய நிறுவனங்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்க 2023 டிசம்பர் முதல் 2024 பிப்ரவரி முடிய மூன்று மாத காலத்திற்கு சிறப்பு இயக்கம் ஒன்றை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஒரு சிறப்பு மீட்பு இயக்கத்தை நடத்துகிறது.
வருங்கால வைப்பு நிதியை செலுத்தத் தவறிய அனைத்து நிறுவனங்களும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பாக்கி வைத்துள்ள தொகையை முழுவதுமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
பாக்கித் தொகையை செலுத்தத்தவறும் நிறுவனங்களின், அசையும் / அசையா சொத்துக்களை பறிமுதல் செய்தல், வங்கிக் கணக்குகளை முடக்குதல், தொகையை வசூலிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தல், நிறுவன அதிபரைக் கைது செய்து சிறையில் அடைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இத்தகைய விரும்பத்தகாத விளைவுகளைத் தவிர்க்குமாறு, நிறுவனங்களும் அதன் உரிமையாளர்களும் அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.