பெண்களுக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு சலுகைகளை சுய லாபத்துக்காக பயன்படுத்தக் கூடாது..!! - நீதிமன்றம் எச்சரிக்கை
புகார் கொடுத்த டெல்லியை சேர்ந்த பெண் ஜூலை 14 அன்று தன் காதலனுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் தகராறு ஏற்படவே காவல் நிலையத்தில் தன்னை கடத்தி கற்பழிப்பு செய்ததாக காதலன் மீது புகார் செய்துள்ளார். பெண்ணின் புகாரை ஏற்று காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரணையில் பெண்ணின் விருப்பத்துடன் உடலுறவு கொண்டதை புகார் அளித்த பெண் நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டுள்ளார். நீதிபதிகள் கூறுகையில், "அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நமது நாட்டு ஆண்களுக்கும் சம உரிமையும், பாதுகாப்பும் உள்ளது. ஆனால், பெண்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், பெண்களைப் பாதுகாப்பதற்கான இந்தச் சிறப்புச் சலுகைகளை பழி தீர்ப்பதற்கு சுய லாபத்துக்காகவோ பயன்படுத்தக் கூடாது. இதுபோன்ற தவறான செயல்கள் சமூகத்தில் தலைவிரித்து ஆடுகின்றன" என்று நீதிமன்றம் கூறியது.
மேலும், இன்றைய காலத்தில் பல காரணங்களுக்காக பலாத்கார வழக்குகள் தொடரப்படுகின்றன. பொய்யான கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் குற்றம் சாட்டப்படும் நபரின் வாழ்க்கையை மட்டுமல்ல, நற்பெயரையும் அழிக்கின்றன. பலாத்காரம் என்பது மிகவும் கொடூரமான மற்றும் வேதனையான குற்றம் என்றும் நீதிமன்றம் கூறியது.
Read more ; ஆடியோ Launch-க்கு வராத அசோக் செல்வன்..!! நீ என்ன அவ்வளவு பெரிய..!! கழுவி ஊற்றிய தயாரிப்பாளர்..!!