அண்ணா பல்கலையில் சிறப்பு புலனாய்வு குழு.. சம்பவ இடத்தில் தடையங்கள் சேகரிப்பு..!!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி கடந்த 23-ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரிக்க, உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், காவல் துணை ஆணையர்கள் சினேக பிரியா (சென்னை அண்ணா நகர்), ஐமான் ஜமால் (ஆவடி), பிருந்தா (சேலம்) ஆகிய 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலைய போலீஸார் பதிவு செய்த எஃப்ஐஆர், கைதான ஞானசேகரன் பற்றிய விவரங்கள், புலனாய்வு விசாரணை விவரங்கள் ஆகியவை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன் அடிப்படையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கினர். ஞானசேகரனின் செல்போனில் இருந்த வீடியோக்கள், எஃப்ஐஆர் தகவல் கசிந்தது, அதை 14 பேர் பார்வையிட்டது ஆகியவை தொடர்பாகவும் விசாரணை தொடங்கியது.
இந்த நிலையில், இன்று அண்ணாபல்கலை கழகம் சென்ற சிறப்பு புலனாய்வு குழு, அங்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துணை ஆணையர்கள் சினேக பிரியா, ஐமான் ஜமால், பிருந்தா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தடையங்களை சேகரித்தனர்.
Read more ; 450 கோடி சிட்-பண்ட் ஊழல்.. சுப்மான் கில் உட்பட 4 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு CID சம்மன்..!!