திறப்பு விழாவிற்கு தயாரான சாதனையாளர் கலைஞர் நினைவிடம்.! இதன் சிறப்பம்சங்கள் என்ன.!
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு கட்டப்பட்டிருக்கும் நினைவிடம் வருகின்ற பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. கலைஞரின் நினைவிடம் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக இருக்கும் நிலையில் அதில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கிறது என இந்த பதிவில் காணலாம்
பேரறிஞர் அண்ணாவின் நினைவு இடத்தில் அருகில் கலைஞர் நினைவிடமும் அமைக்கப்பட்டு இருக்கிறது. பிற அறிஞர் அண்ணாவிற்காக அழகிய நினைவிடத்தை அமைத்து தந்தவர் மறைந்த முதல்வர் கலைஞர். 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி கலைஞர் தனது 95 வது வயதில் மறைந்த பிறகு நீதிமன்றத்தில் ஆணை பெற்று அறிஞர் அண்ணா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அருகிலேயே அதை வெறும் அடக்கம் செய்யப்பட்டார்.
தமிழகத்தில் 19 வருடங்கள் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு தற்போது நினைவிடம் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. இதன் திறப்பு விழா வருகின்ற பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை கடற்கரையின் காமராஜர் சாலையில் கலைஞர் மற்றும் அண்ணாவின் நினைவிடங்கள் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது. இந்த நினைவிடங்களின் முகப்பில் அண்ணா நினைவிடம் கலைஞர் நினைவிடம் என அழகான எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அறிஞர் அண்ணா புத்தகம் படிப்பது போன்ற சிலை அமைந்திருக்கிறது. அந்த சிலையை கடந்து உள்ளே சென்றதும் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடம் வருகிறது. அதைத் தாண்டி உள்ளே சென்றால் அமர்ந்தபடி எழுதிக் கொண்டிருக்கும் கலைஞரின் சிலையை காணலாம். இந்த சிலைக்கு எதிரே கலைஞரின் நினைவிடம் அமைக்கப்பட்டு இருக்கிறது. கலைஞரின் சதுக்கத்தை கண்டதும் நம் மனம் ஒரு கணம் அமைதியாகிறது.
கலைஞரின் நினைவிடத்தில் அவரது எண்ணத்தின்படி ஓய்வில்லாமல் உழைத்தவர் இங்கு உறங்கிக் கொண்டிருக்கிறார் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. கலைஞர் நினைவிடத்தில் தமிழ் செம்மொழி என ஒன்றிய அரசு ஏற்றதற்கு பாராட்டு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் கலைஞருக்கு எழுதிய கடிதம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சதுக்கத்தின் இருபுறமும் புத்தக வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
கலைஞர் சதுக்கத்தின் கீழே கலைஞர் உலகம் என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் கலைஞர் தமிழுக்கு ஆற்றிய சேவைகள் மற்றும் அவருடைய சாதனைகள் ஒவ்வொன்றும் ஒரு அறையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. கலைஞர் உலகத்தில் இருக்கும் நடைபாதையில் செல்லும்போது கலைஞர் அமைத்த திருவள்ளுவர் சிலை குடிசை மாற்று வாரியத் திட்டங்கள் போன்றவை புகைப்படங்களாக மின்னொளியில் மிளிர்கிறது.
கலைஞர் உலகத்தின் உள்ளே சென்றதும் தமிழ் தாய் வாழ்த்து பொறிக்கப்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என கலைஞர் வழங்கிய அரசாணையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து மாநில அரசின் பாடல் என தற்போதைய முதல்வர் ஸ்டாலின் வழங்கிய அரசாணையும் இடம் பெற்று இருக்கிறது. இதனை அடுத்து அமைக்கப்பட்டு இருக்கும் அறைக்கு கலைஞரின் எழிலோவியங்கள் என பேரிடப்பட்டுள்ளது. இந்த அறையில் கலைஞரின் இளமை காலம் முதல் தற்போது வரை அவர் படைத்த சாதனைகள் கலந்து கொண்ட போராட்டங்கள் கலைஞரின் படைப்புகள் ஆகியவற்றின் புகைப்படங்கள் இடம் பெற்று இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து கலைஞர் உரிமை போராளி என்ற அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் கலைஞர் மாநில உரிமைகளுக்காக நடத்திய போராட்டங்கள் மற்றும் மாநிலத்திற்காக பெற்றுத் தந்த பிரதிநிதித்துவங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காட்சி அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. மாநில முதலமைச்சர்கள் தான் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற உரிமையை கலைஞர் பெற்றுத் தந்ததை ஞாபகப்படுத்தும் வகையில் கலைஞர் முதல் முதலாக தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது .
இதனைத் தொடர்ந்து கோபாலபுர இல்லத்தில் கலைஞர் அமர்ந்திருப்பது போன்ற தோற்றம் இடம்பெற்றுள்ளது. இதற்கு அருகே சென்று பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இவற்றின் புகைப்படங்களும் நமக்கு கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கலைஞரின் எட்டுப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன அவற்றின் மீது கை வைத்தால் அந்தப் படைப்புகளுக்கான விளக்கம் வீடியோவாக தோன்றும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது.
இங்கு அமைக்கப்பட்டு இருக்கும் ஒவ்வொரு அறையும் கலைஞரின் பெருமையை பிரதிநிதி படுத்துவதாக அமைந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்டுள்ள அரசியல் கலை அறிஞர் கலைஞர் என்ற அறைக்குள் சென்றால் கலைஞரின் பெரிய நிழல் படம் எதுகை அமைந்துள்ளது. அவற்றிற்கு அருகே இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த இருக்கைகளில் அமர்ந்து அங்கு இருக்கும் வெள்ளித்திரையில் கலைஞரின் அரசியல் மற்றும் கலைப்பயணம் தொடர்பான காணொளி காணலாம். மேலும் இங்கு அமைக்கப்பட்டு இருக்கும் சரித்திர நாயகன் கலைஞர் என்ற அறையில் திருவாரூர் முதல் சென்னை வரை நம்மை ரயிலில் அழைத்து செல்வது போன்ற உணர்வை தரும் . சென்னை மதுரை திருச்சி சேலம் திருநெல்வேலி கோயம்புத்தூர் என அனைத்து பகுதிகளிலும் கலைஞரோடு தொடர்புடைய நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது .
கலைஞர் உலகின் இறுதியில் அமர்ந்த நிலையில் இருக்கும் கலைஞரின் உருவம் ஆகாயத்தில் இருப்பது போன்று காந்த விசையை பயன்படுத்தி அமைக்கப்பட்டிருக்கிறது. கலைஞர் உலகத்தை விட்டு வெளியே வந்தால் அதற்கு எதிரே கலைஞரு புத்தக நிலையம் அமைந்திருக்கிறது. இங்கு கலைஞரின் எழுதிய நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது .
இத்தனை அற்புதங்கள் நிறைந்த கலைஞரின் நினைவிடம் வருகின்ற பிப்ரவரி 26ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. சட்டப்பேரவையின் இறுதி நாளில் பேசிய முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளும் திறப்பு விழாவில் மறக்காமல் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.