முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பொங்கல் பண்டிகை.. நாளை முதல் 4 நாட்களுக்கு சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்..!! - போக்குவரத்து துறை

Special connecting buses will run for 4 days from tomorrow..!! - Department of Transport0
06:48 PM Jan 09, 2025 IST | Mari Thangam
Advertisement

தமிழர் திருநாளான  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இதற்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14,104 பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.

Advertisement

ஜனவரி 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.  சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை முதல் 13ம் தேதி வரை கூடுதலாக சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரத்துக்கு சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

Read more ; இரவில் குளிப்பது நல்லதா? அறிவியல் காரணமும்.. ஆன்மீகம் கூறுவதும் இதோ..

Tags :
pongal festivalSpecial connecting busestn government
Advertisement
Next Article