For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மிஸ் பண்ணிடாதீங்க...! வேலை இல்லாத இளைஞர்களுக்கு நாளை நடைபெறும் சிறப்பு முகாம்...!

Special camp to be held tomorrow for unemployed youth
07:20 AM Jan 23, 2025 IST | Vignesh
மிஸ் பண்ணிடாதீங்க     வேலை இல்லாத இளைஞர்களுக்கு நாளை நடைபெறும் சிறப்பு முகாம்
Advertisement

தனியார்துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் "தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்" நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

Advertisement

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தனியார்துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் "தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்" நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நாளை நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம்.

இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர். சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்டு போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யவுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சி பெறாதவர், 12-ம் வகுப்பு, பட்டயப்படிப்பு(Diploma), பட்டப்படிப்பு(Degree). ஐ.டி.ஐ (தொழிற்பழகுநர்) பயிற்சி மற்றும் கணினியியல் (Java, Tally) முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இலவச திறன் பயிற்சிகளில் சேர பதிவும் ஆலோசனையும் வழங்கப்படும். இம்முகாமில் பங்குபெறும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.

வேலையளிப்போரும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும். இவ்வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு 04286- 222260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். ஆகவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் நாளை காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

Tags :
Advertisement