முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

TN Special Bus | வீக் எண்ட்.. சென்னையில் இருந்து கிளம்பும் சிறப்பு பேருந்துகள்..!! பயணிகளே ரெடியா?

Special buses will be run from Chennai Kilambakkam bus station to south districts and from other places to Kilambakkam bus station.
10:47 AM Aug 30, 2024 IST | Mari Thangam
Advertisement

வார இறுதி நாள் மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இதனால் சொந்த ஊர் செல்லும் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

விடுமுறை தினங்களில் பெரும்பாலானோர் ஒரே நேரத்தில் பயணம் மேற்கொள்வதால் மற்ற நாட்களை விடை இந்த வாறு இறுதி நாட்களில், பஸ் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதும். இதனால் ஆம்னி பஸ்களிலும் கட்டணம் பலமடங்கு அதிகரித்து இருக்கும். ரயில்களிலும் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதால் வார இறுதி நாட்களில் சொந்த ஊர் சென்று வருவதற்குள் பயணிகள் நொந்துபோய்விடுவர். பயணிகளின் இந்த சிரமங்களை தீர்க்க தமிழக போக்குவரத்து கழகம் வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் கூறியிருப்பதாவது:- 30/08/2024 (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம் 31/08/2024 (சனிக்கிழமை) மற்றும் 01/09/2024 (ஞாயிறுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 30/08/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 355 பேருந்துகளும், 31/08/2024 (சனிக்கிழமை) 360 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 30/08/2024 வெள்ளிக் கிழமை அன்று 75 பேருந்துகளும் 31/08/2024 சனிக்கிழமை அன்று 75 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 30/08/2024 அன்று 20 பேருந்துகளும் 31/08/2024 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7,950 பயணிகளும் சனிக்கிழமை 3,663 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,840 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே. பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more ; MLA வீட்டின் முன்பு தீக்குளித்த திமுக நிர்வாகி..!! சிகிச்சை பலனின்றி இன்று மரணம்..!!

Tags :
Kilambakkamspecial buses
Advertisement
Next Article