முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இன்று பெளர்ணமி - திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

06:20 AM May 22, 2024 IST | Baskar
Advertisement

பௌர்ணமியை ஒட்டி திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இன்று பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவர். அளவுக்கு அதிகமாக வரும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், பக்தர்களின் கூட்ட நெரிசலைச் சமாளிக்கவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம்.

இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், 'இன்று சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 330 பேருந்துகள் இயக்கப்படும். பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 225 பேருந்துகள் இயக்கப்படும். அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி, குளிர்சாதன வசதி கொண்ட 30 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து நாளை திருவண்ணாமலைக்கு இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்' என, கூறப்பட்டுள்ளது.

Read More: கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களையும் பாதிக்கும் புதிய வேரியன்ட் FLiRT!

Tags :
GovtbusSpeicalbustnbus
Advertisement
Next Article