'கடந்தாண்டு விஷச்சாராய மரணங்கள்' அரசு எடுத்த நடவடிக்கை இதுதான்!! - முதலமைச்சர் விளக்கம்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டின் விவகாரத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவரித்தார்.
பேரவையில் பேசிய முதலமைச்சர், “கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இதேபோன்ற சம்பவம் ஒன்றை அரசு சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது. அந்த வழக்கு இரு மாவட்டங்கள் தொடர்புடையது. அதில் விழுப்புரத்தினைப் பொருத்தவரை 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 8 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல்துறை அலுவலர்கள் 16 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் மெத்தனால் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. செங்கல்பட்டு வழக்கைப் பொருத்தவரை 6 வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. 9 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 6 காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது” என தெரிவித்தார்.
Read more ; “ஹஜ் புனித யாத்திரை சென்ற 1000-க்கும் மேற்பட்டோர் மரணம்!!” இந்த சம்பவத்திற்கு காரணம் என்ன?