முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இனி கண்ட மருந்துகள் வேண்டாம்.. இந்த ஒரு ரசம் போதும்.. உடலில் உள்ள பாதி பிரச்சனை முடிந்து விடும்..

spanish-thyme-remedy-for-cold-and-cough
04:56 AM Dec 07, 2024 IST | Saranya
Advertisement

சளி, ஜலதோஷம் என்றாலே பலர் கடையில் இருக்கும் கெமிக்கல் நிறைந்த மருந்துகளை வாங்கி குடித்து விடுகின்றனர். பல மருந்துகளால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம். பெரும்பாலும் நாம் ஆரோக்கியமான வழிகளை விட்டு விடுகிறோம். குழந்தைகளுக்கும் சிறு வயது முதல் லேசாக தும்மினாலே உடனே மெடிக்கலில் மருந்து வாங்கி குடுத்து விடுகிறோம். ஆனால் இது முற்றிலும் தவறு, இதனால் அவர்களின் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் கைவைத்தியம் செய்யாவிட்டாலும் உணவு முறைகள் மூலம் சில பிரச்சனைகளை சரி செய்து விடலாம்.

Advertisement

அந்த வகையில், மூலிகை தாவரத்தில் மிக முக்கியமானது கற்பூரவல்லி. பருவகால மாற்றங்களில் உண்டாகும் சளி, இருமல் காய்ச்சலுக்கு இது ஒரு நல்ல மருந்து. இந்த இந்த மூலிகை சலிக்கு மட்டும் இல்லாமல், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதனால் இந்த கற்பூரவல்லியை வைத்து சுவையான ரசம் செய்து சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில், ஆரோக்கியமான சுவையான கற்பூரவல்லி ரசம் எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

முதலில், 10 பற்கள் பூண்டை, மேல் தோல் உரித்து நன்கு தட்டி வைத்துகொள்ளவும். பெரிய நெல்லிகை அளவு அல்லது சுவைக்கு ஏற்ப புளியை கரைத்து வைத்துக்கொள்ளுங்கள். 10 கற்பூரவல்லி இலையை பொடிப் பொடியாக நறுக்கி இடித்து கொள்ளுங்கள். இப்போது 1 டீஸ்பூன் தனியா, 1 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம், 1 தக்காளி மற்றும் 1 கற்பூரவள்ளி இலையை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக பொடித்து வைத்துக்கொளுங்கள். இப்பொது ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு நாம் தட்டி வைத்திருக்கும் பூண்டை இதில் சேர்த்து விடுங்கள். இப்போது அரைத்த பொடி, மஞ்சள் சேர்த்து புளிகரைசலை ஊற்றவும். இலேசாக கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் தட்டி வைத்துள்ள கற்பூரவல்லி இலை சேர்த்து உப்பு, பெருங்காயம் சேர்த்து உப்பு போட்டு இறக்கவும்.

இறக்கிய பிறகு, கொத்துமல்லித்தழை தூவிவிடவும். இப்போது தொண்டைக்கு இதமான சுவையான ரசம் தயார். ​இதை நீங்கள் அப்படியே சூப் ஆகவும் குடிக்கலாம். சளி, மூக்கில் நீர் வடிதல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும். இதனால் இதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது காரம் சற்று குறைக்க வேண்டும். குழந்தைக்கு முதல் முறை கொடுக்கும் போது ஒவ்வாமை ஏற்படுகிறதா அல்லது ஒத்துகொள்கிறதா என்பதை கவனித்து கொடுக்க வேண்டும்.

கற்பூரவல்லி இலையில், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் கே, லுடின், ஜியாக்சாண்டின், பீட்டா கரோட்டின் மற்றும் ஃபோலேட் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. மேலும், இந்த இலையின் சாற்றில் இருக்கும் கார்வாக்ரோல் என்னும் வேதிப்பொருள் வலுவான வைரஸ் தடுப்பு செயல்பாடுகளை கொண்டுள்ளது. மேலும், கற்பூரவல்லி இலையில் இருக்கும் தைமால் மற்றும் கார்வாக்ரோலின் ஆனது சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளை கொண்டுள்ளது. ஆப்பிளை விட கற்பூரவல்லி இலையில் அதிக ஆக்ஸிஜனேற்ற செயல்பாடுகள் உள்ளது. மேலும், இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. உடலில் எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்பை குறைகிறது.

Read more: உடல் எடையை குறைக்க வேண்டும், ஆனால் ஓட்ஸ் சாப்பிட பிடிக்கவில்லையா? அப்போ இதை செஞ்சு பாருங்க..

Tags :
coldmedicinePressurespanish thyme
Advertisement
Next Article