வேலுமணி பேசியத்துக்கும் அதிமுகவிற்கும் சம்பந்தமில்லை..! வெளிச்சத்துக்கு வந்த மோதல்..! போட்டுடைத்த ஜெயகுமார்…!
எஸ்.பி வேலுமணி நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் அதிமுக பாஜக கூட்டணி அண்ணாமலையால் தான் பிரிந்தது. இல்லையென்றால் அதிமுக பாஜக கூட்டணி 35 தொகுதிகள் வரை வென்றிருக்கும் எனக் கூறினார். அதனைத் தொடர்ந்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நான் தலைவராக இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்றும், 2026 சட்டசபை தேர்தல் பாஜக கூட்டணி வெற்றி பெறும்" என்றும், இபிஎஸ்க்கும் எஸ்பி வேலுமணிக்கு உள்கட்சி பிரச்சனை என பதில் கருத்தை தரவித்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கூறியதாவது, "அண்ணாமலையின் பேச்சுகள் ஒருகட்சியின் மாநில தலைவர் பேச்சு போல இல்லை. பாஜக தலைவர் அண்ணாமலையைப் பொறுத்தவரை, புள்ளி ராஜா ஆகிவிட்டார். எதற்கெடுத்தாலும் புள்ளி விவரங்கள் தான். யார் யார் எவ்வளவு வாக்கு வாங்கினார்கள் என்ற விவரங்களைக் கூறி வருகிறார். 2014-ல் வாங்கிய வாக்குகளை விட தற்போது குறைவான வாக்குகளையே பாஜக பெற்றுள்ளது. இதை ஏன் அண்ணாமலை சொல்ல மறந்தார்? 2014 தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், பாஜகவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் வாக்குகள் குறைந்திருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடியை எட்டு முறை அழைத்து வந்தும் கூட பாஜகவால் ஒரு சீட் கூட வெற்றி பெற முடியவில்லை. பா.ஜ.க.வின் கோட்டை எனப்படும் கன்னியாகுமரியிலேயே அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. பாஜகவின் வளர்ச்சி என்னவென்று பார்த்தால், ஒரு வளர்ச்சியும் கிடையாது. ஐ.பி.எல். போட்டியில் தோற்றுக் கொண்டே இருக்கும் பெங்களூரு அணி போல்தான் பா.ஐ.க.எந்த காலத்திலும் பா.ஜ.க.வால் தமிழ்நாட்டில் வெற்றிபெற முடியாது. ஆனால், அதிமுக சென்னை சூப்பர் கிங்ஸ். 30 ஆண்டுகள் ஆட்சி செய்தோம். பல வெற்றிகளைக் குவித்துள்ளோம்.
பா.ஜ.க. மட்டுமல்ல திமுக, அதிமுக தவிர வேறு எந்த கட்சியாலும் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது. அதிமுக பற்றி பேசுவதற்கு பா.ஜ.க.வுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. பாஜக உடன் கூட்டணி அமைத்திருந்தால் 35 இடங்களில் வென்றிருக்கலாம் என எஸ்.பி. வேலுமணி பேசியது அதிமுகவின் கருத்தல்ல அவரின் சொந்த கருத்து. எஸ்பி வேலுமணி பேசியது அனுமானத்தின் அடிப்படையில் ஆனது. பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இனி இல்லை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது, என்று ஜெயக்குமார் கூறினார்.
ஜெயக்குமாரின் கருத்தும் எஸ்பி வேலுமணியின் கருத்தும் மாறாக இருப்பதால் அண்ணாமலை கூறியது போல் எஸ்பி வேலுமணிக்கும் அதிமுக தலைமைக்கும் கருத்து மோதல் இருப்பது வெளிச்சாத்துக்கு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர் தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. குறிப்பாக கோவையில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மூன்றாம் இடத்தையே பிடித்தது குறிப்பிடத்தக்கது.
Read More: