அடுத்த 5 நாட்களில் தென்மேற்கு பருவமழை துவக்கம்..!! இயல்பைவிட அதிக மழை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!
அடுத்த 5 நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால், இந்தாண்டு முன்னதாகவே தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதற்கேற்றவாறு, தென் அரபிக்கடல், மாலத்தீவு, கொமரியன் பகுதி, லட்சத்தீவுகளின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை உருவாகக்கூடும் என்றும் தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், வடகிழக்கு வங்கக்கடல் சில பகுதிகளிலும், வட கிழக்கில் சில பகுதிகளிலும் இதே நாட்களில் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜூன் - செப்டம்பர் மாதங்களுக்கான தென்மேற்கு பருவமழையின் தொலைநோக்கு முன்னறிவிப்பு கண்ணோட்டத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ”தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் தெற்கு அரபிக்கடல் பகுதி, மாலத்தீவு, கன்னியாகுமரி பகுதிகளிலும் தென் மேற்கு பருவமழை 5 நாளில் துவங்க வாய்ப்புள்ளது. நாட்டின் பெரும்பாலான மானாவாரி விவசாய பகுதிகளை உள்ளடக்கிய பருவமழை மைய மண்டலத்தில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும்.
நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்குப் பருவமழை (ஜூன் முதல் செப்டம்பர் வரை) இந்தியாவின் மத்திய மற்றும் தெற்கு தீபகற்ப பகுதியில் இயல்பை விட அதிகமாக இருக்கும். வடமேற்கு இந்தியாவில் இயல்பாகவும், வடகிழக்கு இந்தியாவில் இயல்புக்கு குறைவாகவும் இருக்கும். நாட்டின் பெரும்பாலான மானாவாரி விவசாய பகுதிகளை உள்ளடக்கிய பருவமழை மைய மண்டலத்தில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Read More : வாஷிங் மெஷினில் போடும் துணிகளில் இனி சுருக்கமே வராது..!! இதை ட்ரை பண்ணி பாருங்க..!!