முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மக்களே ரெடியாகுங்க..!! பொங்கல் பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!!

Southern Railway has announced that train ticket booking for Pongal festival will start from 12th.
10:07 AM Sep 10, 2024 IST | Mari Thangam
Advertisement

பொங்கல் பண்டிகை விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவலை ரயில்வே துறை தெரிவித்துள்ளது. தீபாவளி, பொங்கல் உள்பட முக்கிய பண்டிகை நாட்களில் சென்னையில் இருக்கும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என்பதால் முன்கூட்டியே முன்பதிவு விறுவிறுப்பாக தொடங்கும் என்பது தெரிந்தது.

Advertisement

பொங்கல் பண்டிகைக்கு, ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12-ந்தேதி முதல் தொடங்குவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக , கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே தொடங்குவது வழக்கம்.

அதன்படி, 2025ம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி போகி பண்டிகையும், 14-ம் தேதி பொங்கல், 15-ம் தேதி மாட்டுப் பொங்கல், 16-ம்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12-ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, ஜனவரி 10-ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர், செப்டம்பர் 12-ம் தேதியும், ஜனவரி 11-ல் பயணம் செய்ய விரும்புவோர் செப்.13-ம் தேதியிலும், ஜனவரி 12-ல் பயணம் செய்ய செப். 14-ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம். இதேபோல், ஜனவரி 13-ம் தேதி போகி பண்டிகைக்கு பயணம் செய்ய செப்.15-ம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.

முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் இந்தியாவில் உள்ள அனைத்து டிக்கெட் முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தென்னக ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Read more ; 25 முதல் 45 வயது… கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு…!

Tags :
irctcpongal festivalsouthern railwaytrain ticket
Advertisement
Next Article