For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வடகொரியாவில் சினிமா பாடலை கேட்ட சிறுவர்கள்!… 12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட அவலம்!

10:06 AM Jan 21, 2024 IST | 1newsnationuser3
வடகொரியாவில் சினிமா பாடலை கேட்ட சிறுவர்கள் … 12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட அவலம்
Advertisement

வடகொரியாவில் சினிமா இசையை ரசித்த 2 பள்ளி சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனையை வடகொரியா அரசு வழங்கியுள்ளது.

Advertisement

கிழக்காசிய நாடான வடகொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள தடை உள்ளது. அதுபோல, அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களும் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவருடைய குடும்பத்தாரை பற்றிய செய்திகளும் வெளியுலகுக்கு தெரியாது. இதற்காக, வட கொரியாவில், இணையதளம் பயன்படுத்த, பல கட்டுப்பாடுகள் உள்ளன. வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதை உலக நாடுகள் அறிந்துகொள்ள முடியாத வண்ணம் இரும்புத் திரையை வடகொரியாவை சுற்றிலும் கிம் ஏற்படுத்தியுள்ளார்.

வட கொரிய மக்கள் தென் கொரிய மக்களுடன் எத்தகைய தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும், அப்படி தொடர்பு வைத்துக் கொண்டால் சொந்த நாட்டு மக்களுக்கே தண்டனை வழங்கும் கொடூரம் நிலவி வருகிறது. வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் உத்தரவின் பெயரில் இவை முன்னெடுக்கப்படுகிறது, வட கொரியாவில் தென் கொரிய நாடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வட கொரியாவில் சினிமா இசையை ரசித்த 2 பள்ளி சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனையை வடகொரியா அரசு வழங்கியுள்ளது. இது குறித்து டோக்கியோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பேராசிரியர் சோய் க்யோங் ஹுய் பேசிய போது, சிறுவர்களுக்கு இது போன்ற கடுமையான தண்டனை விதித்ததன் மூலம் வட கொரிய மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் மூலம் தென் கொரிய கலாச்சாரம் வட கொரியாவில் ஊடுருவி வருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது

Tags :
Advertisement