தென்கொரியாவை உலுக்கிய விமான விபத்து.. சிதறி கிடக்கும் சடலங்கள்.. பலி எண்ணிக்கை 124 ஆக உயர்வு..!!
தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து ஜெஜு ஏர் பிளைட் என்ற விமானம் 181 பேருடன், இன்று தென் கொரியாவிற்கு சென்றவுள்ளது. இந்த விமானம் தென்கொரியாவின் ஜியோல்லா மாகாணத்தின் தலைநகரான முவான் சர்வதேச விமான நிலையத்தில், தரையிறங்கும் போது லேண்டிங்க் கியரில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி தடுப்பு சுவரில் மோதி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் அடுத்த நொடியிலேயே விமானம் முழுவதும் தீ பிடித்து, கரும்புகைகள் வெளியேறியது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தற்போதைய நிலவரப்படி இந்த விபத்தில் 124 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. முவான் சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் ஏற்ப்பட்டுள்ள இந்த விபத்தை பார்த்த அங்கிருந்த பயணிகள் பலர் அச்சமடைந்துள்ளனர். இந்த விபத்து நிகழ்ந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவின் தென் ஜியோல்லா மாகாணத்தில் உள்ள முக்கிய பிராந்திய மையமான தென்மேற்கு கடற்கரை விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9:07 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; Yearender : 2024இல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் டாப் 10 அறிவிப்புகள் இதோ..