மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும் முள் சீதாப்பழம்.! வேறு என்னென்ன நோய்களை குணப்படுத்தும்.!?
பொதுவாக சீத்தா பழம் பச்சை நிறத்தில் தோல் கடினமாகவும், உள்பகுதி விதைகளுடன் சதை பற்றாகவும், இனிப்பு சுவையுடனும் இருக்கும். சீத்தா பழத்தில் பச்சை, சிவப்பு என இரு வகைகள் உள்ளது என்பதுதான் நமக்கு தெரியும். ஆனால் சீதாப்பழத்தில் முள் சீத்தாப்பழம் என ஒரு பலவகை உள்ளது என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த முள் சீதாப்பழத்தில் பலவகையான நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்கள் உள்ளது.
1. முள் சீத்தாப்பலத்தில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, மாவு சத்து, கொழுப்பு சத்து என பல வகையான ஊட்டச்சத்துக்கள் கொண்டுள்ளதால் இது நம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை குணப்படுத்துகிறது.
2. முள் சீத்தா பழத்தில் உள்ளே இருக்கும் சதை பகுதியை அரைத்து சாராக குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமடையும்.
3. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
4. குறிப்பாக ரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்களை வெளியேற்றி ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்கிறது.
5. இதயத்திற்கு இரத்தம் செல்லும் தமனிகளில் உள்ள அடைப்புகளை நீக்கி இரத்தம் சீராக செல்ல உதவுகிறது. இதனால் மாரடைப்பு, நெஞ்சு வலி போன்ற இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
6. முள் சீத்தா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் புற்று நோய்களை ஏற்படாமல் முற்றிலுமாக அழிக்கிறது. இவ்வாறு பல வகையான நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் முள் சீதாப்பழத்தில் உள்ளது என்பதால் இதை அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.