Lok Sabha election Results 2024: 40 தொகுதிகளிலும் திமுக முன்னிலை! - தர்மபுரியில் சௌமியா அன்புமணி பின்னடைவு!!
தற்போதைய நிலவரப்படி, தருமபுரியில் செளமியா அன்புமணி பின்னடைவை சந்தித்துள்ளார். அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் தற்போது 40 தொகுதிகளிலும் திமுக முன்னனியில் உள்ளது.
இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. 2ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும், 3ஆம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், 4ஆம் கட்ட தேர்தல் மே 13ஆம் தேதியும், 5ஆம் கட்ட தேர்தல் மே 20ஆம் தேதியும், 6ஆம் கட்ட தேர்தல் மே 25ஆம் தேதியும் நடைபெற்றது. இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடந்தது.
இதனையடுத்து பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க-வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், பா.ம.க தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்ற தொகுதி தருமபுரி என்பதாலும், அவருடைய சௌமியா அன்புமணி போட்டியிடுவதாலும் கவனிக்கப்படும் தொகுதியானது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தருமபுரி மக்களவைத் தொகுதியில் சௌமியா அன்புமணி முன்னிலை வகித்து வந்தார். தற்போதைய நிலவரப்படி, தருமபுரியில் செளமியா அன்புமணி பின்னடைவை சந்தித்துள்ளார். அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் தற்போது 40 தொகுதிகளிலும் திமுக முன்னனியில் உள்ளது.